மகளிர் உரிமைத்தொகை திட்ட களப்பணிகள்


மகளிர் உரிமைத்தொகை திட்ட களப்பணிகள்
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேலையூர், மணிகிராமம் பகுதிகளில் மகளிர் உரிமைத்தொகை திட்ட களப்பணிகள் கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற மயிலாடுதுறை மாவட்டத்தில் 413 முகாம்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, விண்ணப்பத்தில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் சரியானதா என 413 அலுவலர்களை கொண்டு கள ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே இந்த கள ஆய்வு பணிகள் சரியாக நடக்கிறதா என சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட மேலையூர், மணிகிராமம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள இடங்களுக்கு சென்று பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் தாங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சரியானதா என கேட்டறிந்தார். ஆய்வின்போது சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்மோகன், தாசில்தார் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story