மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் முகாம்


மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் முகாம்
x

ராதாபுரத்தில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் முகாம் நடந்தது.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் பெறும் முகாம் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் 528 ரேஷன் கடைகளுக்குரிய மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தினமும் 60 மகளிர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தகுதிபெற்ற அனைத்து மகளிர்களுக்கும் பாரபட்சமின்றி வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் உரிமைத்தொகை வழங்கப்பட இருக்கிறது. தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் பொன் மீனாட்சி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story