மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு முகாம்


மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை


மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப சிறப்பு முகாம் இன்று மற்றும் நாளை நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள், முதற்கட்டமாக கடந்த மாதம் 24-ந்தேதி முதல் மயிலாடுதுறை தாலுகாவில் 54 இடங்களிலும், குத்தாலம் தாலுகாவில் 46 இடங்களிலும், சீர்காழி தாலுகாவில் 52 இடங்கள் மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் 59 இடங்களிலும் உள்ள ரேஷன் கடைகள் என மொத்தம் 211 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

சிறப்பு முகாம்

மேற்கண்ட முகாம்களில் விடுபட்ட விண்ணப்பதாரர்களுக்கு இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வௌ்ளிக்கிழமை) அந்தந்த மையங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. ஏற்கனவே முதற்கட்ட முகாமிற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு பல்வேறு காரணங்களால் முகாமிற்கு வந்து பதிவு செய்ய தவறிய விண்ணப்பதாரர்கள், இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம். எனவே இந்த சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி விடுபட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது விண்ணப்பங்களை ஒதுக்கீடு செய்யப்பட்ட முகாம்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story