மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப முகாம்
மங்கநல்லூர் ஊராட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப முகாம்
குத்தாலம்:
குத்தாலம் வட்டத்தில் உள்ள 75 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைகளுக்கான குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் வழங்கும் பணியானது முதற்கட்டமாக குத்தாலம் வட்டத்தில் மங்கநல்லூர் மற்றும் பாலையூர் சரகத்திற்குட்பட்ட 46 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி சிறப்பு முகாம்களில் பெறப்படும் மகளிர் உதவித்தொகை திட்ட விண்ணப்பங்கள் இணையத்தில் சரியாக பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்திட உத்தரவிட்டார். அதன்படி குத்தாலம் தலைமையிடத்து துணை தாசில்தார் பாபு, மங்கநல்லூர் சரகத்திற்குட்பட்ட கொழையூர், செங்குடி, வழுவூர், பண்டாரவாடை, அரிவேளூர், திருநாள்கொண்டச்சேரி, பெருஞ்சேரி, தத்தங்குடி, மங்கநல்லூர் மற்றும் அனந்தநல்லூர் ஆகிய கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்தார். ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் ஷர்மிளா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.