தக்கலையில் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவு முகாம் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு


தக்கலையில் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவு முகாம் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
x

தக்கலையில் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவு முகாமை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

தக்கலை:

பத்மநாபபுரம் நகராட்சியில் தக்கலை டவுன்ஹாலில் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமை நேற்று காலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் தகுதியான எந்த ஒரு பயனாளியும் விடுபடக்கூடாது என்ற நோக்கில் வருவாய் துறையுடன் இணைந்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை 5.7 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களில் இதுவரை 1.60 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பதிவு விரைவில் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள்சோபன், கல்குளம் தாசில்தார் கண்ணன், பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் லெனின், ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் கோலப்பன், தி.மு.க. பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் வீர வர்கீஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

---


Next Story