சங்கராபுரத்தில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார்.


சங்கராபுரத்தில்  மகளிர் வாழ்வாதார சேவை மையம்  கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார்.
x

சங்கராபுரத்தில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக கட்டிடத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் திறப்பு விழா நடந்தது. திட்ட இயக்குனர் (மகளிர்) தேவநாதன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, சேவை மையத்தை திறந்து வைத்து பேசுகையில், தமிழக அரசு ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டமானது ஊரக தொழில்களை மேம்படுத்த, சிறு, குறு தொழில் முனைவோர்கள், உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புகளை உருவாக்குகிறது. மேலும் மகளிர் வாழ்வாதார சேவை மையம் என்பது ஒரு தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு தேவையான சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் ஒரு சேவை மையம் ஆகும். ஆகவே தொழில் முனைவோர்கள் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை அணுகி சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார். விழாவில் தொழில் முனைவோர் 23 பேருக்கு பதிவுச் சான்று, வேளாண் கருவிகள், தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இதில் தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித் குமார், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story