மணிமேகலை விருதுக்கு மகளிர் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்
மணிமேகலை விருதுக்கு மகளிர் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
மணி மேகலை விருது
ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட உள்ளது.
2022-23-ம் ஆண்டிற்கு மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 லட்சம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.3 லட்சம், வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.5 லட்சம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.1 லட்சம், நகரப் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம், பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.3 லட்சம், நகர அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.5 லட்சம், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1 லட்சம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.50 ஆயிரம், நகரப் பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம், பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கலாம்
எனவே சிறப்பாக செயல்படும் அமைப்புகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த அமைப்புகள், தங்கள் பகுதிகளில் அமைந்துள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு, நகராட்சி அல்லது பேரூராட்சி அலுவலகங்களில் செயல்படும் மகளிர் திட்டப் பிரிவில் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.