கலெக்டரிடம் பெண்கள் மனு


கலெக்டரிடம் பெண்கள் மனு
x

மயிலாடுதுறையில் நடந்த குறைதீர்க்கும் முகாமில், பெண்கள் ஊர்வலமாக வந்து தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டர் லலிதாவிடம் மனு அளித்தனர்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த மகாராஜபுரம், சேந்தமங்கலம், பிச்சக்கட்டளை, சங்கேந்தி, தலைச்சங்காடு மற்றும் சீர்காழி தாலுகாவை சேர்ந்த பெருந்தோட்டம், நிம்மேலி, திருவாலி ஆகிய 8 கிராமங்களில் வசிக்கும் விதவைப் பெண்கள் ஒன்றிணைந்து விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம் அமைத்துள்ளனர். இந்த விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மயூரநாதர் கீழவீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தனர். பின்னர் அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் கஸ்தூரி தலைமையில், சங்க நிர்வாகிகள் நவநீதம், புவனேஸ்வரி மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் லலிதாவை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

வீட்டுமனை பட்டா


அந்த மனுக்களில், கணவனை இழந்த விதவைப் பெண்களாகிய தங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி, வீடு கட்டித்தர வேண்டும். விதவைப் பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகையை ரூ.1500-ஆக உயர்த்தித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

Next Story