மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி


மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
x

சீர்காழியில் மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு;

சீர்காழி வட்டாரத்துக்கு உட்பட்ட மகளிர் வாழ்வாதார திட்டத்தின் கீழ் மகளிர் உறுப்பினர்கள் தயாரித்த உணவு மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி ஒன்றிய அவை கூடத்தில் நடந்தது. கண்காட்சிக்கு சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார மேற்பார்வையாளர் மாதரசி வரவேற்றார். கண்காட்சியை ஒன்றியக்குழு தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் செந்தில்குமரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், செல்வ முத்துக்குமாரசாமி, ஜனகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story