மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம்
நாட்டறம்பள்ளி பகுதியில் நடந்த மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
நாட்டறம்பள்ளி பகுதியில் பல்வேறு இடங்களில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் நாளை வரை தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது.
இந்த நிலையில் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விடுபட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணி நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு வெலக்கல்நத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராமன், வருவாய் ஆய்வாளர்கள் அன்னலட்சுமி, வனிதா மற்றும் வருவாய் துறையினர் உள்பட பலர் உடனிருந்தனர்.