மகளிர் சுய உதவிக்குழு கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடி


மகளிர் சுய உதவிக்குழு கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடி
x

மகளிர் சுய உதவிக்குழு கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடி

தஞ்சாவூர்

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் வளாகத்தில் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

விற்பனை அங்காடி

தஞ்சை மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் பூமாலை வணிக வளாகத்திலும், கல்லணையிலும் விற்பனை அங்காடிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 35 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 125 குழு உறுப்பினர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

கலெக்டர் திறந்தார்

இந்த நிலையில் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுயஉதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சை தலையாட்டி பொம்மைகள், பொய்க்கால் குதிரைகள், கால் மிதியடி, பொம்மை வகைகள், பைகள், மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த அங்காடியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று திறந்து வைத்தார். இதில் மகளிர் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, தாசில்தார் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், மகளிர் திட்ட உதவி அலுவலர் சிவா, ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story