மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி


மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
x
தினத்தந்தி 6 March 2023 12:15 AM IST (Updated: 6 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தேசிய அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களின் விற்பனை கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் தேசிய அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களின் விற்பனை கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தேசிய அளவிலான கண்காட்சி

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சாரஸ் என்ற பெயரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களின் விற்பனை கண்காட்சி கோவை வ.உ.சி. மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார்.

கண்காட்சியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். அவர் அங்குள்ள அரங்குகளில் இருந்த பொருட்கள் பற்றி மகளிர் சுயஉதவிக் குழுவினரிடம் கேட்டறிந்தார்.

மோர், ஜூஸ் குடித்த உதயநிதி ஸ்டாலின்

கண்காட்சி அரங்கின் வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கன நாணய சங்கத்தினர் மோர் வழங்கினர். அதை வாங்கி அவர் பருகினார். மேலும் அவர், மாற்றுத்திறனாளிகள் வழங்கிய தர்ப்பூசணிஜூசையும் வாங்கி குடித்தார்.

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும் போது, தேசிய அளவிலான இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநில மகளிர் சுய உதவிக் குழுவினர் மக்களுக்கு உபயோகமான பொருட்களை வைத்து உள்ளனர். இதை மக்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

12-ந் தேதி வரை

இந்த கண்காட்சியானது வருகிற 12-ந் தேதி வரை காலை 10.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.

கண்காட்சியில் கோவையை சேர்ந்த 13 சுயஉதவி குழுவினரும் மற்றும் 36 மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுய உதவி குழுவை சேர்ந்தவர்களும் தங்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தி உள்ளனர்.

திறப்பு விழாவில் கலெக்டர் கிராந்திகுமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை முதன்மை செயலாளர் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story