தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை மகளிர் சுய உதவிக் குழுவினர் முற்றுகையிட்டு தர்ணா


தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை மகளிர் சுய உதவிக் குழுவினர் முற்றுகையிட்டு தர்ணா
x

வந்தவாசி அருகே கடன் வழங்காததை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை மகளிர் சுய உதவிக் குழுவினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே கடன் வழங்காததை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை மகளிர் சுய உதவிக் குழுவினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டுறவு கடன் சங்கம்

வந்தவாசி அருகே ஓசூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஓசூர், நெல்லியாங்குளம், மூடூர், அமுடூர், துணையம்பட்டு, கீழ்செம்பேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 230 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன.

இதில் மகரஜோதி, ஒளிவிளக்கு, செம்பருத்தி, சங்கமம் உள்ளிட்ட 18 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தாட்கோ கடன், நேரடிக் கடன் வழங்குவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உரிய ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கடன் வழங்காமல் மகளிர் சுய உதவிக் குழுவினரை கூட்டுறவு சங்க அலுவலர்கள் அலைக்கழித்து வந்ததாக தெரிகிறது.

தர்ணா போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த 18 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ஓசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடன் வழங்காததை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள் அங்கு விரைந்து வந்து கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story