யூனியன் அலுவலகத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்
நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
நாங்குநேரி:
நாங்குநேரி யூனியன் தெற்கு நாங்குநேரி பஞ்சாயத்து பெரும்பத்து கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நாங்குநேரி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். யூனியன் என்ஜினீயர் சபரி, நாங்குநேரி இன்ஸ்பெக்டர் ஆதாம்அலி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 நாளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story