காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்


காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்
x

கபிஸ்தலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் கிராம மக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வந்தனர். கிராம மக்கள் அன்றாட தேவைக்கு கூட நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்தனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், அன்றாட வேலைக்கு செல்வோர் தண்ணீர் இன்றி சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் குடிநீர் வழங்க வேண்டும் என காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.ஜி.ஆர். காலனிக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 More update

Next Story