ரூ.18 கோடியில் ஆர்.எஸ்.மங்கலம் பெரியகண்மாயில் தூர்வாரும் பணி தீவிரம்


ரூ.18 கோடியில் ஆர்.எஸ்.மங்கலம் பெரியகண்மாயில்  தூர்வாரும் பணி தீவிரம்
x

ரூ.18 கோடியில் ஆர்.எஸ்.மங்கலம் பெரியகண்மாயை தூர் வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ரூ.18 கோடியில் ஆர்.எஸ்.மங்கலம் பெரியகண்மாயை தூர் வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

2-வது பெரியகண்மாய்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் மிகப்பெரிய கண்மாய் அமைந்து உள்ளது. தமிழகத்தில் 2-வது மிகப்பெரிய கண்மாயான இந்த கண்மாயில் ரூ. 18 கோடி நிதியில் தூர்வாரும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவு பெய்ததால் ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் முழுமையாக நீர் நிரம்பியது. இதனால் தூர்வாரும் பணி பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பகுதியில் இருந்த நீர் முழுவதும் வெளி யேற்றப்பட்டு தூர்வாரும் பணி கடந்த 5 மாதத்திற்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணி மிக வேகமாக நடந்து வருகிறது.

மழை சீசன் தொடங்கும் முன்பு ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை தூர்வாரும் பணியை முழுமையாக முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் சுமார் 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு கரை பகுதியை கொண்ட மிகப் பெரிய கண்மாய்.

80 சதவீத பணிகள்

ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை ரூ. 18 கோடி நிதியில் தூர்வாரும் பணியானது கடந்த 1 ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயில் இருந்து தூர் வாருவதற்காக தோண்டப்படும் மணல் மூலம் கண்மாய் கரை பலப்படுத்தப்பட்டு வருகிறது. இது வரை 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது.

இன்னும் மீதம் உள்ள 20 சதவீத பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிந்துவிடும். தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் தற்போது இருந்ததை விட கண்மாயில் தண்ணீர் அதிக அளவில் தேக்கி வைக்க முடியும்.

ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயில் தேக்கி வைக்கும் தண்ணீரால் 48 கிராமங்களை சேர்ந்த சுமார் 12,148 எக்டேர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய கண்மாயில் ஒன்றாக விளங்கும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story