கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்


கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
x

வத்திராயிருப்பு பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக தற்போது குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதையடுத்து தற்போது பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வத்திராயிருப்பில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story