பால் பண்ணை அமைக்கும் பணி தீவிரம்


பால் பண்ணை அமைக்கும் பணி தீவிரம்
x

ஆவிளிப்பட்டியில் பால் பண்ணை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே உள்ள ஆவளிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பசு மாடு, எருமைகள் வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இவைகளில் இருந்து பெறப்படும் பாலை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் சாணார்பட்டியில் உள்ள பால் பண்ணைக்கு தினமும் காலை, மாலை வேளைகளில் கொண்டு செல்லும் நிலை உள்ளது. ஆனால் போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனையடுத்து ஆவிளிப்பட்டி ஊராட்சியில் பால் பண்ணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதைக்கருத்தில் கொண்டு பால் பண்ணை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி பால் பண்ணை அமைப்பதற்கான இடத்தை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆவிளிபட்டி அருகே பெருமாயூர் கிராமத்தில் பண்ணை அமைப்பதற்கான இடம் குறித்து திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தனமேரி ஆய்வு செய்தார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி, வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் கல்யாணசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story