வெற்றிலையூரணி தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி


வெற்றிலையூரணி தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி
x

வெற்றிலையூரணி தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெற்றிலையூரணி தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தெப்பக்குளம்

வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி கிராமத்தின் மையப்பகுதியில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. வரும் பருவ மழை காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெப்பக்குளத்தை தூர்வாரும்பணி தொடங்கியுள்ளது.

இதனை வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரின்ஸ், ஒன்றிய பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். தூர்வாரும் பணிகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவள்ளி செந்தில் குமார் கூறியதாவது:-

தெப்பக்குளம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படவில்லை. ஆதலால் இந்த குளம் சேறும், சகதியுமாக மாறி இருந்தது.

தூர்வாரும் பணி

ஆகாயத்தாமரைகள் பெரிய அளவில் வளர்ந்து இருந்தது. இதனால் மழைநீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை இருந்தது. ஊரில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகள் இங்கு கொட்டப்பட்டு வந்தன. பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக இந்த குளத்தை தூர்வார முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகிறது. தெப்பக்குளத்துக்கு வந்து கொண்டிருந்த சாக்கடை கழிவுநீர்வேறுபகுதியில் திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் தெப்பக்குளத்தில் இருந்த 4 குடிநீர் கிணறுகள் சுத்தம் செய்து முழுமையாக தூர்வரப்பட்ட பின் கிணறுகளில் தண்ணீர் சுத்தமாக வாய்ப்புள்ளது. தெப்பக்குளத்தை தூர்வாருவதால் மழைக்காலத்தில் கூடுதலாக மழை நீரை சேகரிக்கவும், நிலத்தடி நீர் அதிகரிக்கவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story