ரெயில்வே மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும்


ரெயில்வே மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும்
x

சிவகாசி, திருத்தங்கலில் ரெயில்வே மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு விழா சிவகாசியில் நடைபெற்றது. சங்க தலைவர் தியாகராஜன் வரவேற்றார். பொருளாளர் ஜீவானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். சங்க செயலாளர் கற்பகா ஜெய சங்கர் பேசும் போது, சிவகாசி நகரின் 40 ஆண்டு கோரிக்கையாக உள்ள சிவகாசி, திருத்தங்கல் ரெயில்வே மேம்பால பணியை தொடங்க சிவகாசி மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் துறையில் சிறந்து விளங்கும் சிவகாசி நகர வளர்ச்சிக்கு இந்த ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுற்றுவட்ட சாலைகள் முக்கிய திட்டப்பணியாகும். இந்த இரண்டு பணிகளையும் விரைவில் தொடங்கி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் ஆகியோர் ரெயில்வே மேம்பால பணியை தொடங்க தேவையான நடவடிக்கையை உடனே செய்வதாக உறுதி அளித்தனர். நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்தனர். முடிவில் வினோத்கண்ணா நன்றி கூறினார்.



Next Story