மின்பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு பயிற்சி முகாம்


மின்பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் மின்பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் உப மின் கோட்டம் மின்வாரிய அலுவலகத்தில், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின்படி கட்டுமானம் பிரிவுகளில் பணிபுரியும் பிரிவு அலுவலர்கள், மற்றும் பணியாளர்களுக்கான வினியோகத்தில் பாதுகாப்புடன் பணிகள் மேற்கொள்வது சம்பந்தமான பாதுகாப்பு பயிற்சி முகாம் கடையநல்லூர் உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. செயற்பொறியாளர் ஆதிலெட்சுமி தலைமை தாங்கினாா். உதவி செயற் பொறியாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தாா். நெல்லை மண்டல பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் செந்தில் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார் இதில், மின் பணியாளா்கள் எந்த நேரத்திலும் விழிப்புடன் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி மின் விபதில்லாமல் பணியாற்ற வேண்டும். மின்விபத்து ஏற்பட்டால் மின் விபத்துக்குள்ளானவருக்கு முதலுதவி செய்வது எப்படி? என்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

முகாமில் அந்தந்த பிரிவு அனைத்து பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெல்லை தொழில்நுட்ப பயிற்சி மேம்பாட்டு மைய உதவி மின் பொறியாளர் ஜெய்ஸ்ரீ, சிறப்பு நிலை ராமசுப்பு ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story