வேலை நிறுத்த பிரசார வாயிற்கூட்டம்


வேலை நிறுத்த பிரசார வாயிற்கூட்டம்
x

வேலை நிறுத்த பிரசார வாயிற்கூட்டம் நடைபெற்றது.

கரூர்

தமிழ்நாடு மின்வாரிய தொழில் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் மின்வாரிய பணியாளர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். 58 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்த பிரசார நுழைவு வாயிற்கூட்டம் கோவை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்கு கூட்டுக்குழு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின்வாரிய தொழில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story