ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம்:கைதான உதவி பேராசிரியர் பணி இடைநீக்கம்?


ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம்:கைதான உதவி பேராசிரியர் பணி இடைநீக்கம்?
x

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு கைதான அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம்

உதவி பேராசிரியர்

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராகிம் (வயது 57). இவர் சேலம் அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊரான ராமநாதபுரம் சென்றிருந்த அவர், நேற்று முன்தினம் ராமநாதபுரம்-ஹூப்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்-3 பெட்டியில் பயணம் செய்தார்.

அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த ஓசூரை சேர்ந்த 27 வயது பெண்ணிடம் சையது இப்ராகிம் பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ராசிபுரம் கடந்து சேலம் நோக்கி ரெயில் வந்தபோது நடந்துள்ளது.

துறைரீதியான நடவடிக்கை

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரெயில்வே ரோந்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கல்லூரி உதவி பேராசிரியர் சையது இப்ராகிம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கும், தர்மபுரி மண்டல இணை இயக்குனருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் உதவி பேராசிரியர் சையது இப்ராகிம் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, அவர் பணி இடைநீக்கம் செய்யப்படலாம் என கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story