இந்தியாவில் விரைவில் 6ஜி சேவைக்கான பணிகள் தொடங்கும்: மத்திய தொலைத் தொடர்பு துறை செயலாளர் தகவல்


இந்தியாவில் விரைவில் 6ஜி சேவைக்கான பணிகள் தொடங்கும்: மத்திய தொலைத் தொடர்பு துறை செயலாளர் தகவல்
x

கோப்புப்படம்

வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் குறைந்த செலவில் இணைய சேவை கிடைப்பதாக தீரஜ் மிட்டல் தெரிவித்தார்.

சென்னை,

தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான 2 நாட்கள் கருத்தரங்கு, சென்னை ஐ.ஐ.டியில் நேற்று மாலை தொடங்கியது.

மத்திய தொலைத் தொடர்பு துறை செயலாளர் தீரஜ் மிட்டல் காணொலி காட்சி வாயிலாக கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நம் நாடு தொழில்நுட்பத்தில் பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது. எதிர்கால நடைமுறை வாழ்க்கைகளிலும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கும். உயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு தொலைத்தொடர்பு துறை ஊக்கம் அளித்து வருகிறது.

உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ) வளர்ச்சி அடைந்து வருகிறது. செல்போன்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. 2014-ம் ஆண்டில் 1.8 எம்.பி.யாக இருந்த சராசரி இணைய வேகம், தற்போது 50 எம்.பி.யாக அதிகரித்துள்ளது.

வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் குறைந்த செலவில் இணைய சேவை கிடைக்கிறது. விரைவில், 6ஜி சேவைக்கான பணிகள் தொடங்கும். இது, உணர்வுகளையும், கணினிகளையும் ஒன்றிணைக்க கூடியதாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story