15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது


15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது
x

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பாலியல் பலாத்காரம்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரங்கன் (வயது50). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் தாயார் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரங்கனை செய்தனர்.

சிறையில் அடைப்பு

பின்னர் ரங்கனை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி, கைது செய்யப்பட்ட ரங்கனுக்கு நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story