பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது


பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 20 July 2023 4:15 AM IST (Updated: 20 July 2023 4:16 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்


நெகமம்


நெகமத்தை அடுத்த செட்டிபுதூரை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 45). இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் ரங்கசாமி (37), கூலி தொழிலாளி. இந்த நிலையில் ஈஸ்வரிக்கும், ரங்கசாமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ஈஸ்வரிக்கும், ரங்கசாமிக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரங்கசாமி, ஈஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில், நெகமம் போலீசார் விசாரணை நடத்தி ரங்கசாமியை கைது செய்தனர்.



Next Story