பெட்டி கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய தொழிலாளி கைது


பெட்டி கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெட்டி கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய தொழிலாளி கைது

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள கொங்குநாட்டான்புதூர் பிரிவில் முத்துக்குமார் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடையை திறக்க அவர் வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சேலம் மாவட்டம் வெள்ளாறு பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 28) என்பவர் பெட்டி கடையின் பூட்டை உடைத்து ரூ.8 ஆயிரத்து 250-ஐ திருடியது தெரியவந்தது.

மேலும் சேலத்தில் இருந்து கட்டிட வேலைக்கு கொங்குநாட்டான்புதூருக்கு வந்த போது கைவரிசையை காட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story