நாகர்கோவிலில்வியாபாரியை உளியால் குத்திய தொழிலாளி கைது


நாகர்கோவிலில்வியாபாரியை உளியால் குத்திய தொழிலாளி கைது
x

நாகர்கோவிலில்வியாபாரியை உளியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கீழஆசாரிபள்ளம் சானல் கரையைச் சேர்ந்தவர் சந்தியாகு (வயது 61), சாக்கு வியாபாரி. இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு நற்பணி மன்ற கட்டிடத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். அதே கூட்டத்தில் ஆசாரிபள்ளம் புனித யூதா தெருவை சேர்ந்த தொழிலாளி ஜான் சேவியரும் (56) கலந்து கொள்ள வந்தார். அப்போது, அந்த கட்டிடத்தில் அருகே ஜான் சேவியர் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனை சந்தியாகு தட்டி கேட்டார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜான் சேவியர் தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த தச்சு தொழிலுக்கு பயன்படுத்தும் உளியை எடுத்து சந்தியாகுவை சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றார். இதில் சந்தியாகுவின் தலை, கை, மார்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான் சேவியரை கைது செய்தனர்.


Next Story