இரும்பு பொருட்கள் திருடிய தொழிலாளி கைது


இரும்பு பொருட்கள் திருடிய தொழிலாளி கைது
x

இரும்பு பொருட்கள் திருடிய தொழிலாளி கைது

கரூர்

தரகம்பட்டி அருகே உள்ள இடையபட்டி புங்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 47). சென்ட்ரிங் தொழிலாளியான இவர், கடந்த 3 மாதங்களாக இடையபட்டி-சுருமான்பட்டி சாலையில் பாலம் கட்டும் பணியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் பாலம் கட்டுவதற்கு பயன்படுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் (கிளாம்புகள்) தொடர்ந்து மாயமாகி வந்தன. இதையடுத்து பாலகட்டுமான பணி மேற்பார்வையாளர் கரூர் பகுதியை சேர்ந்த ஜோதி பிரசன்னா என்பவர் அங்கு பணிக்கு வந்த தொழிலாளர்களிடம் விசாரித்தார். இதையடுத்து அவர் சந்தேகத்தின் பெயரில் கணபதி வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது கணபதிதான் பாலம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு பொருட்களை (41 கிளாம்புகள்) திருடி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து, கணபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story