கோவில் பூசாரியிடம் பணம் திருடிய தொழிலாளி கைது


கோவில் பூசாரியிடம் பணம் திருடிய தொழிலாளி கைது
x

முனைஞ்சிப்பட்டி அருகே கோவில் பூசாரியிடம் பணம் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

முனைஞ்சிப்பட்டி அருகே காரியாண்டியை அடுத்த திருமலாபுரத்தில் ஸ்ரீவரமங்கை நாச்சியார், ஸ்ரீகுருவையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூசாரியாக அதே ஊரைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 51) என்பவர் உள்ளார். நேற்று அய்யப்பன் தனது பணம் 39 ஆயிரத்தை ஒரு பையில் வைத்துவிட்டு அங்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும் போது மர்ம நபர், பணம் வைத்திருந்த பையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன், அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில் மர்மநபர் ஒருவர் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் அதே ஊரைச்சேர்ந்த கூலி தொழிலாளியான மாடசாமி மகன் சுயம்புலிங்கம் (வயது 44) என்பவர் பணம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து ரொக்கப்பணம் 39 ஆயிரத்தை மீட்டனர்.


Next Story