மோட்டார் சைக்கிள் திருடிய தொழிலாளி கைது
மோட்டார் சைக்கிள் திருடிய தொழிலாளி கைது
கோயம்புத்தூர்
புலியகுளம்
கோவை புலியகுளம் அலமேலு மங்கம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் திருமுருகன்(வயது 40). அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருமுருகன், டெலிவரி எடுப்பதற்காக சூப்பர் மார்க்கெட் மொபட்டில் காந்திபுரம் சென்றார். பின்னர் கிராஸ்கட் ரோடு 5-வது தெருவில் மொபட்டை நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, ஒரு நபர் நைசாக மொபட்டை திருடிவிட்டு தப்பி செல்ல முயன்றார். இதனை பார்த்த திருமுருகன் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி நாகராஜன் (42) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story