மனைவியை மிரட்டிய தொழிலாளி கைது


மனைவியை மிரட்டிய தொழிலாளி கைது
x

மனைவியை மிரட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி பூங்கா நகரை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது 40) கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (30). மீனாட்சி சுந்தரத்திற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் சம்பவத்தன்று குடித்துவிட்டு மனைவியை அவதூறாகப் பேசியும் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து மாரியம்மாள் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்குப்பதிவு செய்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்தார்.


Next Story