போக்சோ வழக்கில் கைதான தொழிலாளி தற்கொலை


போக்சோ வழக்கில் கைதான தொழிலாளி தற்கொலை
x

கோவையில் போக்சோ வழக்கில் கைதான தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்


கோவை புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் பண்ணாரிமுத்து (வயது 42). கூலி தொழிலாளி. குடிபழக்கத்துக்கு ஆளான பண்ணாரிமுத்துவை கோவை கிழக்குப்பபகுதி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு ஒன்றில் கைது செய்தனர். 1½ ஆண்டு சிறையில் தண்டனை பெற்ற அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் தாயுடன் நீலிக்கோணாம்பாளையத்தில் வசித்து வந்தார்.

இவர் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு கோவை அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அதற்கும் பதில் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் அவரது தாயை தொடர்புகொண்டு கேட்டனர். அதற்கு பண்ணாரிமுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து பண்ணாரிமுத்துவை அவருடைய சகோதரர் பல இடங்களில் தேடினார்.

அப்போது அவர் காந்திபுரம் ஜி.பி. சிக்னல் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடப்பது தெரியவந்தது. அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பண்ணாரிமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story