தொழிலாளி அடித்துக் கொலை
திருவையாறு அருகே தொழிலாளிைய அடித்துக் கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம், திருவையாறை அடுத்த வளப்பகுடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 50).தொழிலாளி. இவரது மகள் ரீட்டாமேரியும்(27), பட்டுக்கோட்டை தாலுகா, கருப்பு கிராமத்தை சேர்ந்த சங்கரன் மகன் அய்யப்பனும்(35) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் கடந்த 3 ஆண்டாக வளப்பகுடியில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு அய்யப்பன் குடிபோதையில் வந்து மனைவிடம் தகராறு செய்துள்ளார். இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு ரீட்டாமேரி வந்துள்ளார்.
அடித்துக் கொலை
உடனே அய்யப்பன் மனைவியை தேடி ஜோசப் வீட்டுக்கு வந்தார். அப்போது ஜோசப்புக்கும், அய்யப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், கட்டையால் ஜோசப் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜோசப் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன்மருது, சப்-இன்ஸ்பெக்டர் சார்லிமேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோசப்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், அய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.