ரூ.250 கடனை திருப்பி கொடுக்காத தொழிலாளி அடித்துக் கொலை


ரூ.250 கடனை திருப்பி கொடுக்காத  தொழிலாளி அடித்துக் கொலை
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.250 கடனை திருப்பி கொடுக்காத தொழிலாளியை அடித்து கொலை செய்த நில புரோக்கர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

பீளமேடு

ரூ.250 கடனை திருப்பி கொடுக்காத தொழிலாளியை அடித்து கொலை செய்த நில புரோக்கர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி

கோவை பீளமேடுபுதூரை சேர்ந்தவர் கங்கேஸ்வரன் (வயது 32). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த நில புரோக்கர் லட்சுமணன் (40) என்பவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.250 கடன் வாங்கினார்.

அந்த பணத்தை திருப்பி தராமல் கங்கேஸ்வரன் இருந்து வந்தார். இது பற்றி லட்சுமணன் பலமுறை கேட்டும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

ரூ.250 கடன்

இந்த நிலையில் நேற்று காலை கங்கேஸ்வரன் சவுரிபாளையம் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லட்சுமணன், கங்கேஸ்வரனிடம் தான் கொடுத்த கடன் ரூ.250-ஐ திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

இதனால் அவர் பணம் தர மறுத்ததால் கடனை கொடுக்காமல் மது குடிக்க மட்டும் பணம் எப்படி வந்தது? என்று கேட்டு லட்சு மணன் தகராறு செய்துள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

புரோக்கர் கைது

இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், கங்கேஸ்வரனை கன்னத் தில் ஓங்கி அறைந்தார். அப்போது போதையில் இருந்த அவர், சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் விரைந்து வந்து கங்கேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்க பதிவு செய்து நில புரோக்கர் லட்சுமணனை கைது செய்தனர். டாஸ்மாக் கடை முன்பு தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story