விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

ஜமுனாமரத்தூர் வீரப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், தொழிலாளி. இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

விஜயகுமார் குடிப்பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. கடந்த 29-ந் தேதி இவர் மனைவி சரிதாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டதாகவும், அதற்கு அவர் பணம் இல்லை என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் சரிதா வேலைக்கு சென்று உள்ளார்.

இதற்கிடையில் விஜயகுமார் வீட்டில் இருந்த விஷத்தை (பூச்சி மருந்து) எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். இதுகுறித்து அவரது மகள் வேலைக்கு சென்றிருந்த சரிதாவிடம் தகவலை தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரிதா வீட்டிற்கு வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜமுனாமரத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story