விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 9 Sep 2023 6:45 PM GMT (Updated: 9 Sep 2023 6:45 PM GMT)

ஆளூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

ஆளூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில் அருகே ஆளூர் தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 43), தொழிலாளி. இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் மணிகண்டன் மதுபோதையில் மனைவியின் தாயார் வீட்டுக்கு சென்று தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சங்கீதா ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். மனைவி பிரிந்து சென்ற துக்கத்தாலும், தன் மீது புகார் அளித்த மன வருத்தத்திலும் மணிகண்டன் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மணிகண்டன் தனது தாயரை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு வாழ்க்கையை வாழபிடிக்கவில்லை என கூறி வருத்தப்பட்டுள்ளார். தாயாரும் அவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story