விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை அருகே கெட்டிமேலன்புதூரை சேர்ந்தவர் முருகன்(வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி(35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதற்கிடையில் முருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் ஒட்டன்சத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு திடீரென இளைய மகனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் மகனை அனுமதித்தார். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் ஆஸ்பத்திரியில் சாந்தி மற்றும் மூத்த மகனை விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு முருகன் வந்தார். தொடர்ந்து வழக்கம்போல் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் திடீரென முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆனைமலை போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் முருகன், மகளிர் சுய உதவிக்குழு மூலம் பெற்ற கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததோடு இளைய மகன் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story