விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 19 March 2023 12:15 AM IST (Updated: 19 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமத்தை அடுத்த பெரியகளந்தையை சேர்ந்தவர் வன்னியப்பன்(வயது 78). கூலித்தொழிலாளி. இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வன்னியப்பன், சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வன்னியப்பன் இறந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story