விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
பூதலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் அருகே உள்ள ஆவாரம்பட்டி புது காலனி தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 60).விவசாய தொழிலாளி. இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன்காரணமாக மன வேதனை அடைந்த துரைராஜ், சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். .இதுகுறித்த புகாரின் பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story