விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
மதுகுடிக்க மனைவி பணம் தராததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்
மணல்மேடு:
மணல்மேட்டை அடுத்த காளி செட்டித்தோப்புத்தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 54). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (38). அருள்தாஸ் தினந்தோறும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் பொழுது குடித்துவிட்டு வருவதாக தெரிகிறது. மேலும் மது போதையில் கணவன் மனைவிக்கு இடையே தினசரி தகராறு ஏற்படுவது வழக்கம் எனவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அருள்தாஸ் குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு வற்புறுத்தி சண்டையிட்டுள்ளார். அப்போது கஸ்தூரி பணம் கொடுக்க மறுத்ததால், மனம் உடைந்த அருள்தாஸ் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அருள்தாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.