தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா எருமாடு அருகே வெட்டுவாடி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமித்திரா. இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வகுமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் மாலையில் கூலி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த சுமித்திரா, கணவர் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் செல்வகுமாரை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி செல்வகுமார் இறந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story