தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாததான்குளம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள சடையன்கிணறு கோவில் தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் அறிவழகன் (வயது 35). இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவியும், 2 மகளும் உள்ளனர். இவர் சாத்தான்குளம் அருகே பண்டாரபுரம் ஊராட்சித் தலைவர் பாலசிங் என்பவரது தோட்டத்தில் 2ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 6மணிக்கு வீட்டிலிருந்து தோட்டத்துக்கு பூச்சி மருந்து கொண்டு சென்றுள்ளார். காலை 11.30 மணிக்கு திடீரென்று அவரது மனைவிக்கு பண்டாரபுரம் தோட்டத்தில் அறிவழகன் விஷம் அருந்தி மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. பதறிப்போன அவரது மனைவி உறவினருடன் சென்றுள்ளார். அங்கு தோட்டத்திற்குள் விஷம் குடித்த நிலையில் அறிவழகன் மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். அவரது உடலை பார்த்து மனைவி, குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அந்த தோட்டத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story