தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 July 2023 2:15 AM IST (Updated: 10 July 2023 12:27 PM IST)
t-max-icont-min-icon

வேறு ஒருவரை திருமணம் செய்த காதலி தற்கொலை செய்து கொண்டதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

கோயம்புத்தூர்

துடியலூர்

வேறு ஒருவரை திருமணம் செய்த காதலி தற்கொலை செய்து கொண்டதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

காதலிக்கு திருமணம்

கோவையை அடுத்த துடியலூர் பன்னிமடை கணேஷ்நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களின் மகன் ரத்தீஷ் (வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இதை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்தனர். மேலும் அந்த பெண்ணை வேறு ஒருவருக்கு திடீரென்று திருமணம் செய்து வைத்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

காதலியின் திருமணத்திற்கு சென்ற ரத்தீஷ் கவலையுடன் கோவை திரும்பினார். இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு அந்த இளம்பெண், கணவனுடன் சேர்ந்து வாழாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இதை 2 நாட்களுக்கு முன்பு அறிந்த ரத்தீஷ் தனது காதலி தற்கொலை செய்து கொண்டது பற்றி தனது நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார். மேலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரத்தீஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடிதம் சிக்கியது

இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரத்தீஷ் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. பெற்றோர் என்னை மன்னிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் தடாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநாயனார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story