தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி  தூக்குப்போட்டு தற்கொலை
x

வெறையூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வெறையூர் அருகே உள்ள பவித்திரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் காசி (வயது 65), விவசாய கூலி தொழிலாளி. நேற்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் அருகில் இருந்த மரத்தில் காசி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வெறையூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காசி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story