தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

ராணிப்பேட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்தவர் குட்டியப்பா (வயது 46), கூலி தொழிலாளி. இவர் சம்பள பணத்தை மனைவியிடம் தராமல் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குட்டியப்பா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story