தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 10:43 AM IST)
t-max-icont-min-icon

மனைவி, மகள் பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த திவான்சாபுதூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 50), தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ராதாகிருஷ்ணனின் மனைவி, தனது மகளுடன் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ராதாகிருஷ்ணன் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story