தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

திருமயம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

திருமயம் அருகே பூலான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 43).தொழிலாளி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கருப்பையா ஆதன்குடி கண்மாய் கோவில்பட்டி விலக்கு அருகே உள்ள தைல மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story