தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி வடக்கு ரதவீதி அருகே உள்ள கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் கனகராஜ் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தா (32). இவர்களுக்கு காவியா (11), சுபா (8) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கனகராஜ் வேலைக்கு சரிவர செல்வது இல்லை என்றும், மது குடித்து விட்டு குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது கனகராஜ், சாந்தாவை தாக்கினார். இதனால் சாந்தா கோபித்துக் கொண்டு, 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த கனகராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story