தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
விக்கிரமசிங்கபுரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் முத்துவேல்குமார் (வயது 36). இவர் டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், அவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் முத்துவேல்குமார் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்து உள்ளார். இதனால் இரவில் முத்துவேல்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த முத்துவேல்குமாருக்கு செண்பகம் என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
Related Tags :
Next Story